ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

Update:2025-05-09 06:28 IST
Live Updates - Page 2
2025-05-09 15:11 GMT

இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு நன்றி - ஜெய்சங்கர்

டெல்லியில் உள்ள ரஷிய தூத‌ரகத்தில், இரண்டாம் உலகப்போர் வெற்றி விழா நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:-

பயங்கரவாத‌த்திற்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. பயங்கரவாதம், இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வரும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி என்றார்.

2025-05-09 14:40 GMT

டெல்லி எய்ம்ஸ் ஊழியர்களின் விடுமுறை ரத்து

பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளை ரத்து செய்துள்ளது. மருத்துவ காரணங்களை தவிர, மறு உத்தரவு வரும் வரை, எந்தவொரு அதிகாரிக்கும் நிலைய விடுப்பு உட்பட எந்த வகையான விடுப்பும் வழங்கப்படாது. மேலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்பு ஏதேனும் இருந்தால், அது ரத்து செய்யப்படுகிறது, மேலும் விடுப்பில் உள்ள அதிகாரிகள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2025-05-09 14:34 GMT

ஜம்மு-காஷ்மீரின் ஹண்ட்வாரா மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் போர் நிறுத்த மீறி தாக்குதலை நடத்தி வருகிறது அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  

2025-05-09 14:26 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முப்படைகளில் நீண்ட காலம் பணியாற்றி அனுபவம் மிக்கவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முப்படை தளபதிகள், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளனர்.

2025-05-09 14:25 GMT

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீர் உரி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. சற்றுமுன் எல்லையில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

2025-05-09 14:15 GMT

காஷ்மீரின் உரி எல்லை பகுதியில் சிறிய ரக பீரங்கிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

2025-05-09 14:07 GMT

சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, நாளை 10.05.2025 வ.ஊ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இடங்களில் மாலை 04.00 மணியளவில் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-05-09 13:26 GMT

பஞ்சாபில் படித்துவந்த தமிழ்நாட்டை சேர்ந்த 6 மாணவர்கள் டெல்லி திரும்பினர். லவ்லி பல்கலை.யில் படித்த மாணவர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

2025-05-09 13:21 GMT

இந்தியா, பாக். மோதல் - சிங்கப்பூர் அரசு கவலை

இரு தரப்பினரும் ராஜதந்திர வழிமுறைகள் மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும்.அனைத்து பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசு வலியுறுத்தி உள்ளது.

2025-05-09 13:19 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடிகர் ராம்கி சாமி தரிசனம் செய்தார். பக்தர்கள், கோவில் ஊழியர்கள் என பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்