இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டருக்கு நேர்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், இலங்கை விமானப்படையின் 7வது பிரிவுக்கு சொந்தமானது.
பொய்களால் உலகை ஏமாற்ற பாகிஸ்தான் முயற்சி - இந்திய வெளியுறவுத்துறை
புதுடெல்லி,
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தனது வான் எல்லையை மூடாமல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து விமானங்களை பாகிஸ்தான் கேடயமாக்கியது. கராச்சி, லாகூர் நகரங்களின் மீது பயணிகள் விமானம் தொடர்ந்து பயணிக்கிறது. பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு இந்தியா சரியான பதிலடி தந்திருக்கிறது. தவறான தகவல்களை அளித்து உலகை ஏமாற்ற பாகிஸ்தான் முய்ற்சிக்கிறது. பூஞ்ச் பகுதியில் குருத்வார் ஒன்றை பாகிஸ்தான் தாக்கியது. சீக்கிய வழிபாட்டுத்தலங்களை இந்தியா தாக்கியதாக பொய்த்தகவலை பாகிஸ்தான் பரப்புகிறது.
மே 7-ம் தேடி பூஞ்ச் பகுதியில் தனியார் பள்ளி மீது பாகிஸ்தான் தாக்கியது. பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. பூஞ்ச் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றையும் பாகிஸ்தான் தாக்கியது. தேவாலய தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பெற்றோர் காயமடைந்துள்ளனர். வழிபாட்டு தலங்களை தாக்கவில்லை என பாகிஸ்தான் சொல்கிறது.
பாகிஸ்தானுக்கு நிதியுதவி வருவதை தடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பன்னாட்டு நாணய நிதியத்தை இந்தியா அணுகும் என்றார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியாவின் 26 ராணுவ நிலைகள் மீது நேற்று பாகிஸ்தான், துருக்கியின் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்தியா வழிமறித்து அவற்றை அழித்தது.தனது விமான நிலைகளை பாதுகாக்க, பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்துகிறது பாகிஸ்தான் என்று கர்னல் சோபியா குரேஷி கூறியுள்ளார்.
தனது வான் எல்லையை மூடாமல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து விமானங்களை பாகிஸ்தான் கேடயமாக்கியது. காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தாக்க முயன்றது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியுள்ளார்.
சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார். இரவு நேரத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருவதாக அருண் தெரிவித்துள்ளார்.
புதிய ஒருங்கிணைந்த மினி பஸ் திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 1,842 மினி பஸ்களின் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.
எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இன்று மாலை வெளியுறவு அமைச்சகம் சார்பில் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. மாலை 5.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் 2.0 தொடர்பாக விளக்கம் அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் 138 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்க்-களுக்கு படையெடுக்க வேண்டாம். நாடு முழுவதும் தேவையான எரிபொருள் இருப்பு கைவசம் உள்ளது. விநியோகமும் சீராக உள்ளது. அமைதியாக இருந்து எங்களுக்கு உதவுங்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.