நெல்லையில் மின் பொறியாளர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நெல்லை தியாகராஜநகரில் உள்ள திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.;

Update:2025-10-28 10:47 IST

நெல்லை தியாகராஜநகரில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க கலந்து கொண்ட அனைவரும் லஞ்சத்திற்கு எதிரான லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி, இயக்குதல் மேற்பார்வை பொறியாளர் ஷீபாரெஜி, செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி ஆகியோருடன் திருநெல்வேலி மண்டலம் மற்றும் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்