பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது


பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது
x

திண்டுக்கல் மாவட்டம், பழனி, RF-ரோடு ஈஸ்வரன் ஓட்டல் அருகே குடிபோதையில் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், பழனி, RF-ரோடு ஈஸ்வரன் ஓட்டல் அருகே குடிபோதையில் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து பணியில் இருந்த பழனி நகர் காவல் நிலைய காவலர் பிரபு அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் காவலர் பிரபுவை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த பிரபு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேற்சொன்ன சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் தலைமையில் பழனி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவலர் பிரபுவை தாக்கிய பழனி, கொடைக்கானல் ரோடு பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் நித்தியானந்தம் (வயது 35), ஆறுமுகம் மகன்கள் வீரசேகர்(32), மணிகண்டன்(28), திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அருள்குமார்(40) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story