கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு

மணலி புதுநகர், நாப்பாளையம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடந்து மறுகரைக்கு சென்றால் ரூ.500 தருவதாக நண்பர்கள் 2 பேர் பந்தயம் கட்டினர்.
சென்னை
சென்னை மாதவரம், பர்மா காலனி, 3வது தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 50). எருக்கஞ்சேரியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (50). நண்பர்களான இவர்கள் இருவரும் மணலி புதுநகர், நாப்பாளையம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடந்து மறுகரைக்கு சென்றால் ரூ.500 தருவதாக பந்தயம் கட்டினர்.
இதையடுத்து ராஜாவும், கிருஷணமூர்த்தியும் கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் போட்டி போட்டு நீந்தி சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மாயமான 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று தேடி வந்தனர். நேற்று மணலி புதுநகர் வடிவுடையம்மன் நகர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் ஓரமாக உள்ள முட்புதரில் கிருஷ்ணமூர்த்தி உடல் கரை ஒதுங்கியது. மாயமான ராஜாவை தொடர்ந்து தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story






