இளைஞர்களின் நம்பிக்கை குரல் உதயநிதி ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை

துணை முதல்-அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் நம்பிக்கை குரல் உதயநிதி ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை
Published on

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

துணை முதல்-அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனைப் புரட்சியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மக்கள் நலப் பணியும் பிரதிபலிக்கும் விதமாக, இளைஞர்களின் நம்பிக்கைக் குரலாக நீங்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

நல்ல ஆரோக்கியமும் தொடர்ந்து மக்களுக்கு சேவை புரியும் ஆற்றலும் என்றும் உங்களை பொலிவுடன் சேரட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com