ஆவடி அருகே கணவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி - குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்


ஆவடி அருகே கணவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி - குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்
x

குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

விழுப்புரம் மாவட்டம் கிடார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 37). இவருடைய மனைவி விஜயலட்சுமி (27). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் 3 பேரும் விழுப்புரத்தில் பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்கேயே படித்து வருகின்றனர்.

கிருஷ்ணன் தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடந்த 15 ஆண்டுகளாக ஆவடி அடுத்த மேட்டு தும்பூர் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தங்கி, செங்கல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கணவன்-மனைவி இருவரும் அவ்வப்போது விழுப்புரம் சென்று பிள்ளைகளை பார்த்துவிட்டு வருவார்கள்.

கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். நள்ளிரவை தாண்டியும் இவர்களின் தகராறு நீடித்தது.

அதிகாலை 1.30 மணிக்கு மீண்டும் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து கிருஷ்ணனின் தலையில் போட்டார். இதில் மண்டை உடைந்ததால் ரத்த வெள்ளத்தில் விழுந்த கிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், ெகாலையான கிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவனை கொலை செய்த விஜயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story