பொய்களால் உலகை ஏமாற்ற பாகிஸ்தான் முயற்சி - இந்திய வெளியுறவுத்துறை


பொய்களால் உலகை ஏமாற்ற பாகிஸ்தான் முயற்சி -  இந்திய வெளியுறவுத்துறை
x
Daily Thanthi 2025-05-09 12:43:37.0
t-max-icont-min-icon

புதுடெல்லி,

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தனது வான் எல்லையை மூடாமல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து விமானங்களை பாகிஸ்தான் கேடயமாக்கியது. கராச்சி, லாகூர் நகரங்களின் மீது பயணிகள் விமானம் தொடர்ந்து பயணிக்கிறது. பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு இந்தியா சரியான பதிலடி தந்திருக்கிறது. தவறான தகவல்களை அளித்து உலகை ஏமாற்ற பாகிஸ்தான் முய்ற்சிக்கிறது. பூஞ்ச் பகுதியில் குருத்வார் ஒன்றை பாகிஸ்தான் தாக்கியது. சீக்கிய வழிபாட்டுத்தலங்களை இந்தியா தாக்கியதாக பொய்த்தகவலை பாகிஸ்தான் பரப்புகிறது.

மே 7-ம் தேடி பூஞ்ச் பகுதியில் தனியார் பள்ளி மீது பாகிஸ்தான் தாக்கியது. பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. பூஞ்ச் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றையும் பாகிஸ்தான் தாக்கியது. தேவாலய தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பெற்றோர் காயமடைந்துள்ளனர். வழிபாட்டு தலங்களை தாக்கவில்லை என பாகிஸ்தான் சொல்கிறது.

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வருவதை தடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பன்னாட்டு நாணய நிதியத்தை இந்தியா அணுகும் என்றார்.

1 More update

Next Story