ஆளுமை வளர்ச்சி

ஆரோக்கியமே அழகு- சோனாலி
எனது இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தார்கள். அதன் பிறகு எனது உடல் எடை 103 கிலோ ஆனது. மூட்டு வலி, தைராய்டு என பல பிரச்சினைகளை சந்தித்தேன். பலரது கேலிக்கு ஆளானதால், எடையைக் குறைக்க வேண்டும் என்ற உறுதி எடுத்தேன்.
31 July 2022 7:00 AM IST
பள்ளிக் குழந்தைகளின் 'பிரியசகி'
2003-ம் ஆண்டு அரசு உதவிபெறும் பள்ளியில் எனக்கு வேலை கிடைத்தது. முதல் தலைமுறையாகப் படிக்கும் குழந்தைகள்தான் அங்கே அதிகமாக இருந்தனர். கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகளான அவர்களுக்கு ‘கால்பந்து, ஓட்டப் பந்தயம் போன்றவற்றில் அதிக திறமைகள் இருந்தும், படிப்பில் ஏன் அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை?’ என்ற கேள்வி எழுந்தது.
31 July 2022 7:00 AM IST
ஆர்வம் இருந்தால் அனைத்தையும் பெறலாம் - ஸ்ருதி
நான் முதன் முதலில் விற்பனையை ஆரம்பித்தது சமூக வலைத்தளத்தில்தான். அதுதவிர, நண்பர்கள் மூலமாகவும் சில வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். என்னிடம் பரிசுப் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள், தங்களுக்கு பிடித்திருந்ததால் தங்களுடைய நட்பு வட்டாரங்களுக்கும் எனது தயாரிப்புகளை பரிந்துரை செய்தனர்.
24 July 2022 7:00 AM IST
கமர்சியல் புகைப்படவியலில் கலக்கும் பிரீத்தி
2016-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டில் இருந்தே பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது, புகைப்படவியல் சார்ந்த வீடியோக்களை பார்ப்பது, நிபுணர்களின் உரைகளை கேட்பது, புகைப்படம் எடுத்துப் பழகுவது என ‘புகைப்படவியல்’ படிப்பிற்கு என்னை தயார்படுத்தத் தொடங்கினேன்.
24 July 2022 7:00 AM IST
பெண்ணின் வளர்ச்சி நாட்டை முன்னேற்றும் - சுகுணா
தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்துடன் எங்கள் கிராமத்தில் இருந்து, கோவை நகரத்துக்கு குடிபெயர்ந்தேன். அங்கு உள்ள பயிற்சிப் பள்ளியில் வேலை செய்து கொண்டே சந்தைப் படுத்துதலில் நிர்வாகியாகவும் பணியாற்றினேன். அதன்பிறகு பேஷன் டிசைனிங்கில் முதுகலைப் பட்டயப் படிப்பையும் முடித்தேன்.
24 July 2022 7:00 AM IST
ஒளி இழந்த விழிகளுக்கு வழிகாட்டும் ரிஷி வதனா
தேவைப்படும் நேரங்களில் பாடங்கள் சொல்லித் தருவது, அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளில் அவர்கள் கலந்துகொள்ளும்பொழுது அவர்களுக்கு உதவிகரமாக இருப்பது என ‘ஸ்கிரைப்’பின் தேவை அதிகமாக இருந்து வருகிறது.
17 July 2022 7:00 AM IST
தலைமை பண்பும் சாதனைதான்
ஒரு அணியை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்வதற்கு தலைமைப்பண்பு முக்கியமானது. கேப்டன் ஆக வேண்டும் என்றால் முதலில் என்னை முழுவதுமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் முதலில் முன்னுதாரணமாக இருந்தால் மட்டுமே, அணியை வழிநடத்திச் செல்ல முடியும் என்று உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு என்னை தயார்படுத்திக் கொண்டேன்.
17 July 2022 7:00 AM IST
பெண்களின் வளர்ச்சிக்கு தொண்டாற்றும் மீனா
சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ‘பிழைகளற்ற உச்சரிப்பு, ழகரப் பயிற்சி’ வகுப்பு ஒரு வருட காலம் நடத்தப்பட்டு, பரிசு சான்றிதழ் வழங்கப் பட்டது. சென்னையில் பல அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், நல்லாசிரியர் விருதுகள் வழங்கல் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன்.
17 July 2022 7:00 AM IST
தேவையற்ற சிந்தனைகளை தவிருங்கள் - கிருத்திகா தரன்
உடலில் இரண்டு மூளைகள் இருக்கிறது என்று கூறலாம். ஒரு மூளை தலையில் உள்ளது. இன்னொரு மூளை நமது வயிறு. அதனால்தான் பதற்றம் ஏற்படும்போது, முதலில் வயிறு சரியில்லாமல் போகிறது. சாப்பிட்டவுடன் ஒரு தெளிவு கிடைக்கிறது.
17 July 2022 7:00 AM IST
படைப்பாளிகளை ஊக்குவிக்கும் லட்சுமி பிரியா
எனக்குத் தமிழ் மீது ஆர்வம் உண்டு. அம்மா மும்பையில் உள்ள பள்ளியில் பணியாற்றியதால், எனது இளமைக் காலத்தை அங்கு கழிக்க வேண்டி இருந்தது. ஆனாலும், வீட்டில் தமிழில் தான் பேசுவோம். பாரதியார் கவிதை மூலம் வாசிப்புக்கு அம்மா வழி காட்டினார். அதனால் தமிழ் மீது எனக்கு ஆர்வம் உண்டானது.
10 July 2022 7:00 AM IST
அழகு அனைவருக்கும் பொதுவானது- சுஹாஷினி
2007-ம் ஆண்டு இலங்கையில் போர்ச்சூழல் இருந்தபோது, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலையில் இருந்து கிளம்பி, சனிக்கிழமை காலை கொழும்பு சென்றடைவேன். அங்கே ஒரு வீட்டில் கட்டணம் செலுத்தி தங்கி, வார இறுதி நாட்களில் அழகுக் கலை பயிற்சியை முடித்துவிட்டு, ஞாயிறு மாலை கொழும்பில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலையில் வீடு வந்து சேர்வேன்.
3 July 2022 7:00 AM IST
சிலம்பம் தேடித் தரும் பெருமை
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் பழம்பெருமை வாய்ந்தது. ஒழுக்கம், வீரம் போன்ற பண்புகளை கற்றுத்தரக்கூடியது. எனவே சிலம்பம் மற்றும் களரி இரண்டையும் கற்று வருகின்றேன். 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வீரத்தமிழர் சிலம்பம் அறக்கட்டளையில் சேர்ந்து பயிற்சி செய்து வருகிறேன்.
3 July 2022 7:00 AM IST









