அய்யப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி - மத்திய மந்திரி தகவல்

அனைத்து சமுதாயத்தினரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
அய்யப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி - மத்திய மந்திரி தகவல்
Published on

ஐதராபாத்,

கார்த்திகை மாதத்தையொட்டி, அய்யப்ப பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார்கள். நீண்ட தொலைவில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் செல்கிறார்கள். அவர்கள் இருமுடியை தங்களுடன் எடுத்துச்செல்வது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது.

இந்நிலையில், அவர்கள் இருமுடி எடுத்துச்செல்லலாம் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராமமோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-

புனிதமான இருமுடியுடன் தொடர்புடைய உணர்வுகளை மதிக்கும்வகையில், விமானங்களில் அய்யப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்துச்செல்ல அனுமதிப்பது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பொருட்கள் வைக்கும் பகுதியில் எடுத்துச்செல்லாமல், பயணிகள் பகுதியில் தங்களுடனே வைத்துக்கொள்ளும் கேபின் லக்கேஜ் ஆக கொண்டு செல்லலாம். இதன்மூலம் அவர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும். தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் அதே வேளையில், பக்தர்களின் உணர்வுகளுக்கு முழு மதிப்பு அளிக்கப்படும். அனைத்து சமுதாயத்தினரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com