கடலூரில் கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்


கடலூரில் கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x

6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவலச் சூழல் தமிழகத்தில் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.

6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் முதல்-அமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story