அரசியல் அதிரடி திருப்பம்: பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது.
திண்டிவனம்,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையலாம் என தகவல் வெளியான நிலையில் தற்போது பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது.
திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. உயர்மட்ட கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?, வேப்டாளர்கள் யார்? என்பது குறித்த அறிவிப்பை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
#BREAKING || பாஜக - பாமக கூட்டணி உறுதி
— Thanthi TV (@ThanthiTV) March 18, 2024
மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்கிறது பாமக
கூட்டணியை உறுதி செய்தார் பாமக மாநில
பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்#ThanthiTV #PMK #BJP #Election2024 pic.twitter.com/5BksOzAcm2
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





